Senthamil.Org

கிளர்மழை

தேவாரம்

கிளர்மழை தாங்கினான் நான்முக முடையோன் 
கீழடி மேல்முடி தேர்ந்தளக் கில்லா 
உளமழை யெனதுரை தனதுரை யாக 
வொள்ளழல் அங்கையி லேந்திய வொருவன் 
வளமழை யெனக்கழை வளர்துளி சோர 
மாசுண முழிதரு மணியணி மாலை 
இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர் 
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
கிளர்மழை எனத்தொடங்கும் தேவாரம்