Senthamil.Org

காவிரியின்

தேவாரம்

காவிரியின் கரைக்கண்டி வீரட் டானங்
கடவுஜர்வீ ரட்டானங் காமருசீ ரதிகை
மேவியவீ ரட்டானம் வழுவை வீரட்டம்
வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக் கிடமாங்
கோவல்நகர் வீரட்டங் குறுக்கை வீரட்டங்
கோத்திட்டைக் குடிவீரட் டானமிவை கூறி
நாவினவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன்றமருஞ் சிவன்றமரென் றகல்வர் நன்கே.
காவிரியின் எனத்தொடங்கும் தேவாரம்