Senthamil.Org

காலனைக்

தேவாரம்

காலனைக் காலாற் செற்றன் 
றருள்புரி கருணை யானே 
நீலமார் கண்டத் தானே 
நீண்முடி யமரர் கோவே 
ஞாலமாம் பெருமை யானே 
நளிரிளந் திங்கள் சூடுங் 
கோலமார் சடையி னானே 
கோடிகா வுடைய கோவே.
காலனைக் எனத்தொடங்கும் தேவாரம்