Senthamil.Org

காலதிற்

தேவாரம்

காலதிற் கழல்க ளார்ப்பக் 
கனலெரி கையில் வீசி 
ஞாலமுங் குழிய நின்று 
நட்டம தாடு கின்ற 
மேலவர் முகடு தோய 
விரிசடை திசைகள் பாய 
மாலொரு பாக மாக 
மகிழ்ந்தநெய்த் தான னாரே.
காலதிற் எனத்தொடங்கும் தேவாரம்