Senthamil.Org

காரைகள்

தேவாரம்

காரைகள் கூகைமுல்லை களவாகை ஈகை 
படர்தொடரி கள்ளி கவினிச் 
சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த 
சிவன்மேய சோலை நகர்தான் 
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை 
குதிகொள்ள வள்ளை துவள 
நாரைக ளாரல்வார வயன்மேதி வைகும் 
நனிபள்ளி போலு நமர்காள்.
காரைகள் எனத்தொடங்கும் தேவாரம்