Senthamil.Org

காருலாவிய

தேவாரம்

காருலாவிய வார்குழ லாள்கயற் 
கண்ணினாள் புயற்காலொளி மின்னிடை 
வாருலாவிய மென்முலையாள்மலை மாதுடனாய் 
நீருலாவிய சென்னி யன்மன்னி 
நிகருநாமம்முந் நான்கு நிகழ்பதி 
போருலாவெயில் சூழ்பொழிற்புஜந்தராய் போற்றுதுமே.
காருலாவிய நஞ்சையுண்டிருள் 
கண்டவெண்டலை யோடுகொண் 
டூரெலாந்திரிந் தென்செய்வீர்பலி 
ஓரிடத்திலே கொள்ளும்நீர் 
பாரெலாம்பணிந் தும்மையேபர 
விப்பணியும்பைஞ் ஞீலியீர் 
ஆரமாவது நாகமோசொல்லும் 
ஆரணீய விடங்கரே.
காருலாவிய எனத்தொடங்கும் தேவாரம்