Senthamil.Org

காராரு

தேவாரம்

காராரு மணிமிடற்றெம் பெருமான் றன்னைக்
காதில்வெண் குழையானைக் கமழ்புஜங் கொன்றைத்
தாரானைப் புலியதளி னாடை யானைத்
தானன்றி வேறொன்று மில்லா ஞானப்
பேரானை மணியார மார்பி னானைப்
பிஞ்ஞகனைத் தெய்வநான் மறைகள் புஜண்ட
தேரானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
காராரு எனத்தொடங்கும் தேவாரம்