Senthamil.Org

காரழற்

தேவாரம்

காரழற் கண்ட மேயாய் 
கடிமதிற் புரங்கள் மூன்றும் 
ஓரழல் அம்பி னாலே 
யுகைத்துத்தீ எரிய மூட்டி 
நீரழற் சடையு ளானே 
நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய் 
ஆரழல் ஏந்தி யாடும் 
ஆவடு துறையு ளானே.
காரழற் எனத்தொடங்கும் தேவாரம்