Senthamil.Org

காய்ந்தாய்

தேவாரம்

காய்ந்தாய் அனங்கன் உடலம் 
பொடிபடக் காலனைமுன் 
பாய்ந்தாய் உயிர்செகப் பாதம் 
பணிவார்தம் பல்பிறவி 
ஆய்ந்தாய்ந் தறுப்பாய் அடியேற் 
கருளாயுன் அன்பர்சிந்தை 
சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத் 
துறையுஞ் சிவக்கொழுந்தே.
காய்ந்தாய் எனத்தொடங்கும் தேவாரம்