Senthamil.Org

கழித்திலேன்

தேவாரம்

கழித்திலேன் காம வெந்நோய் 
காதன்மை என்னும் பாசம் 
ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி 
உணர்வெனும் இமைதி றந்து 
விழித்திலேன் வெளிறு தோன்ற 
வினையெனுஞ் சரக்குக் கொண்டேன் 
அழித்திலேன் அயர்த்துப் போனேன் 
அதிகைவீ ரட்ட னாரே.
கழித்திலேன் எனத்தொடங்கும் தேவாரம்