Senthamil.Org

கழன்மல்கு

தேவாரம்

கழன்மல்கு பந்தொடம் மானைமுற்றில் 
கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள் 
பொழின்மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும் 
புகலி நிலாவிய புண்ணியனே 
எழின்மல ரோன்சிர மேந்தியுண்டோ ர் 
இன்புறு செல்வமி தென்கொல்சொல்லாய் 
மிழலையுள் வேதிய ரேத்திவாழ்த்த 
விண்ணிழி கோயில் விரும்பியதே.
கழன்மல்கு எனத்தொடங்கும் தேவாரம்