Senthamil.Org

கள்ளவிழ்

தேவாரம்

கள்ளவிழ் மலர்மே லிருந்தவன் கரியோ னென்றிவர் காண்பரி தாய
ஒள்ளெரி யுருவர் உமையவ ளோடும் உகந்தினி துறைவிடம் வினவிற்
பள்ளநீர் வாளை பாய்தரு கழனி பனிமலர்ச் சோலைசூ ழாலை
ஒள்ளிய புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே.
கள்ளவிழ் எனத்தொடங்கும் தேவாரம்