Senthamil.Org

கள்ளனேன்

தேவாரம்

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் 
காலத்தைக் கழித்துப் போக்கித் 
தெள்ளியே னாகி நின்று 
தேடினேன் நாடிக் கண்டேன் 
உள்குவார் உள்கிற் றெல்லாம் 
உடனிருந் தறிதி யென்று 
வெள்கினேன் வெள்கி நானும் 
விலாவிறச் சிரித்திட் டேனே.
கள்ளனேன் எனத்தொடங்கும் தேவாரம்