Senthamil.Org

களங்கொள்

தேவாரம்

களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங் 
கடிகமழ் சடைக்கேற்றி 
உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர் 
பொருகரி யுரிபோர்த்து 
விளங்கு மேனியர் எம்பெரு மானுறை 
விற்குடி வீரட்டம் 
வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார் 
வருத்தம தறியாரே.
களங்கொள் எனத்தொடங்கும் தேவாரம்