Senthamil.Org

கலையார்

தேவாரம்

கலையார் மதியோ டுரநீரும் 
நிலையார் சடையா ரிடமாகும் 
மலையா ரமுமா மணிசந்தோ 
டலையார் புனல்சே ருமையாறே.
கலையார் கலிக்கா ழியர்மன்னன் 
நலமார் தருஞான சம்பந்தன் 
அலையார் புனல்சூ ழுமையாற்றைச் 
சொலுமா லைவல்லார் துயர்வீடே.
கலையார் எனத்தொடங்கும் தேவாரம்