Senthamil.Org

கலையானைப்

தேவாரம்

கலையானைப் பாசுபதப் பாணி யானைக்
கனவயிரத் திரளானை மணிமா ணிக்க
மலையானை யென்றலையி னுச்சி யானை
வார்தருபுன் சடையானை மயான மன்னும்
நிலையானை வரியரவு நாணாக் கோத்து 
நினையாதார் புரமெரிய வளைத்த மேருச்
சிலையானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.
கலையானைப் எனத்தொடங்கும் தேவாரம்