Senthamil.Org

கலைஞானங்

தேவாரம்

கலைஞானங் கல்லாமே கற்பித் தானைக்
கடுநரகஞ் சாராமே காப்பான் றன்னைப்
பலவாய வேடங்கள் தானே யாகிப்
பணிவார்கட் கங்கங்கே பற்றா னானைச்
சிலையாற் புரமெரித்த தீயா டியைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிலையார் மணிமாட நீடூ ரானை
நீதனே னென்னேநான் நினையா வாறே.
கலைஞானங் எனத்தொடங்கும் தேவாரம்