Senthamil.Org

கலியேன்

தேவாரம்

கலியேன் மானுட வாழ்க்கையொன் றாகக் 
கருதிடிற் கண்கணீர் பில்கும் 
பலிதேர்ந் துண்பதோர் பண்புகண் டிகழேன் 
பசுவே ஏறிலும் பழியேன் 
வலியே யாகிலும் வணங்குதல் ஒழியேன் 
மாட்டேன் மறுமையை நினையேன் 
நலியேன் ஒருவரை நானுமை யல்லால் 
நாட்டியத் தான்குடி நம்பீ.
கலியேன் எனத்தொடங்கும் தேவாரம்