Senthamil.Org

கற்றிலேன்

தேவாரம்

கற்றிலேன் கலைகள் ஞானங் 
கற்றவர் தங்க ளோடும் 
உற்றிலே னாத லாலே 
உணர்வுக்குஞ் சேய னானேன் 
பெற்றிலேன் பெருந்த டங்கண் 
பேதைமார் தமக்கும் பொல்லேன் 
எற்றுளேன் இறைவ னேநான் 
என்செய்வான் தோன்றி னேனே.
கற்றிலேன் எனத்தொடங்கும் தேவாரம்