Senthamil.Org

கற்றார்

தேவாரம்

கற்றார் பயில்கடல் நாகைக்கா 
ரோணத்தெங் கண்ணுதலே 
விற்றாங் கியகரம் வேல்நெடுங் 
கண்ணி வியன்கரமே 
நற்றாள் நெடுஞ்சிலை நாண்வலித் 
தகர நின்கரமே 
செற்றார் புரஞ்செற்ற சேவக 
மென்னைகொல் செப்புமினே.
கற்றார் எனத்தொடங்கும் தேவாரம்