Senthamil.Org

கற்றானுங்

தேவாரம்

கற்றானுங் குழையுமா றன்றியே 
 கருதுமா கருத கிற்றார்க் 
கெற்றாலுங் குறைவில்லை என்பர்காண் 
 உள்ளமே நம்மைநாளுஞ் 
செற்றாட்டித் தருமனார் தமர்செக்கில் 
 இடும்போது தடுத்தாட் கொள்வான் 
பெற்றேறிப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் 
 பெருமானைப் பெற்றா மன்றே.
கற்றானுங் எனத்தொடங்கும் தேவாரம்