Senthamil.Org

கற்றவர்கள்

தேவாரம்

கற்றவர்கள் பணிந்தேத்துங் கழுமலத்து 
ளீசன்றன் கழல்மேல்நல்லோர் 
நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம் 
பந்தன்றான் நயந்துசொன்ன 
சொற்றுணையோ ரைந்தினொடைந் திவைவல்லார் 
தூமலராள் துணைவராகி 
முற்றுலக மதுவாண்டு முக்கணான் 
அடிசேர முயல்கின்றாரே.
கற்றவர்கள் எனத்தொடங்கும் தேவாரம்