Senthamil.Org

கற்றதேல்

தேவாரம்

கற்றதேல் ஒன்று மில்லை 
காரிகை யாரோ டாடிப் 
பெற்றதேற் பெரிதுந் துன்பம் 
பேதையேன் பிழைப்பி னாலே 
முற்றினால் ஐவர் வந்து 
முறைமுறை துயரஞ் செய்ய 
அற்றுநான் அலந்து போனேன் 
ஆரூர்மூ லட்ட னீரே.
கற்றதேல் எனத்தொடங்கும் தேவாரம்