Senthamil.Org

கறையுங்கொப்

தேவாரம்

கறையுங்கொப் பளித்த கண்டர் 
காமவேள் உருவம் மங்க 
இறையுங்கொப் பளித்த கண்ணார் 
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் 
மறையுங்கொப் பளித்த நாவர் 
வண்டுண்டு பாடுங் கொன்றை 
அறையுங்கொப் பளித்த சென்னி 
அதிகைவீ ரட்ட னாரே.
கறையுங்கொப் எனத்தொடங்கும் தேவாரம்