Senthamil.Org

கறையராய்க்

தேவாரம்

கறையராய்க் கண்ட நெற்றிக் 
கண்ணராய்ப் பெண்ணோர் பாகம் 
இறையராய் இனிய ராகித் 
தனியராய்ப் பனிவெண் டிங்கட் 
பிறையராய்ச் செய்த வெல்லாம் 
பீடராய்க் கேடில் சோற்றுத் 
துறையராய்ப் புகுந்தெ னுள்ளச் 
சோர்வுகண் டருளி னாரே.
கறையராய்க் எனத்தொடங்கும் தேவாரம்