Senthamil.Org

கறைகொள்

தேவாரம்

கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் 
அறத்திற முனிவர்க்கன் 
றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந் 
தினிதருள் பெருமானார் 
மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி 
யிடமகிழ்ந் தருங்கானத் 
தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய 
அற்புதம் அறியோமே.
கறைகொள் கண்டத்தெண் டோ ளிறை முக்கணன்
மறைகொள் நாவினன் வானவர்க் காதியான்
உறையும் புஜம்பொழில் சூழ்கச்சி யேகம்பம்
முறைமை யாற்சென்று முந்தித் தொழுதுமே.
கறைகொள் எனத்தொடங்கும் தேவாரம்