Senthamil.Org

கரைக்கடந்

தேவாரம்

கரைக்கடந் தோத மேறுங் 
கடல்விட முண்ட கண்டன் 
உரைக்கடந் தோது நீர்மை 
யுணர்ந்திலே னாத லாலே 
அரைக்கிடந் தசையு நாகம் 
அசைப்பனே இன்ப வாழ்க்கைக் 
கிரைக்கிடைந் துருகு கின்றேன் 
என்செய்வான் தோன்றி னேனே.
கரைக்கடந் எனத்தொடங்கும் தேவாரம்