Senthamil.Org

கருவரை

தேவாரம்

கருவரை யனைய மேனிக் 
கடல்வண்ண னவனுங் காணான் 
திருவரை யனைய புஜமேல் 
திசைமுக னவனுங் காணான் 
ஒருவரை உச்சி ஏறி 
ஓங்கினார் ஓங்கி வந்து 
அருமையில் எளிமை யானார் 
அவர்வலம் புரவ னாரே.
கருவரை போலரக் கன்கயி 
 லைம்மலைக் கீழ்க்கதற 
ஒருவிர லாலடர்த் தின்னருள் 
 செய்த உமாபதிதான் 
திரைபொரு பொன்னிநன் னீர்த்துறை 
 வன்றிகழ் செம்பியர்கோன் 
நரபதி நன்னிலத் துப்பெருங் 
 கோயில் நயந்தவனே.
கருவரை எனத்தொடங்கும் தேவாரம்