Senthamil.Org

கரும்பமரும்

தேவாரம்

கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் றன்னைக் 
கனவயிரக் குன்றனைய காட்சி யானை
அரும்பமரும் புஜங்கொன்றைத் தாரான் றன்னை 
அருமறையோ டாறங்க மாயி னானைச்
சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச் 
சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
கரும்பமரும் எனத்தொடங்கும் தேவாரம்