Senthamil.Org

கருமானின்

தேவாரம்

கருமானின் உரியுடையர் கரிகாடர் இமவானார் 
மருமானார் இவரென்றும் மடவாளோ டுடனாவர் 
பொருமான விடையூர்வ துடையார்வெண் பொடிப்புஜசும் 
பெருமானார் பிஞ்ஞகனார் பெருவே@ர் பிரியாரே.
கருமானின் உரியதளே உடையா வீக்கிக் 
கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை யேந்தி
வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட
வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண
அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
கருமானின் உரியாடைச் செஞ்சடைமேல் 
 வெண்மதியக் கண்ணி யானை 
உருமன்ன கூற்றத்தை உருண்டோ ட 
 உதைத்துகந் துலவா இன்பம் 
தருவானைத் தருமனார் தமர்செக்கில் 
 இடும்போது தடுத்தாட் கொள்வான் 
பெருமானார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் 
 பெருமானைப் பெற்றா மன்றே.
கருமானின் எனத்தொடங்கும் தேவாரம்