Senthamil.Org

கருமருவு

தேவாரம்

கருமருவு வல்வினைநோய் காற்றி னான்காண்
காமருபுஜங் கச்சியே கம்பத் தான்காண்
பெருமருவு பேருலகிற் பிணிகள் தீர்க்கும்
பெரும்பற்றத் தண்புலியூர் மன்றா டீகாண்
தருமருவு கொடைத்தடக்கை அளகைக் கோன்றன்
சங்காத்தி ஆரூரில் தனியா னைகாண்
திருமருவு பொழில்புடைசூழ் திருப்புத் தூரில்
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
கருமருவு எனத்தொடங்கும் தேவாரம்