Senthamil.Org

கருமணியைக்

தேவாரம்

கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானைக்
கருதுவார்க் காற்ற எளியான் றன்னைக்
குருமணையைக் கோளரவ மாட்டு வானைக்
கொல்வேங்கை யதளனைக்கோ வணவன் றன்னை
அருமணியை அடைந்தவர்கட் கமுதொப் பானை
ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க
திருமணியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
கருமணியைக் எனத்தொடங்கும் தேவாரம்