Senthamil.Org

கருமணிபோற்

தேவாரம்

கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய்
கல்லால நிழற்கீ ழிருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் புஜண்டான் கண்டாய்
பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்
வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணிபோல் அழகமருங் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
கருமணிபோற் எனத்தொடங்கும் தேவாரம்