Senthamil.Org

கருப்பமிகும்

தேவாரம்

கருப்பமிகும் உடலடர்த்துக் காலூன்றிக் 
கைமறித்துக் கயிலையென்னும் 
பொருப்பெடுக்க லுறுமரக்கன் பொன்முடிதோள் 
நெரித்தவிரற் புனிதர்கோயில் 
தருப்பமிகு சலந்தரன்றன் உடல்தடிந்த 
சக்கரத்தை வேண்டியீண்டு 
விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி 
விமானஞ்சேர் மிழலையாமே.
கருப்பமிகும் எனத்தொடங்கும் தேவாரம்