Senthamil.Org

கருநட்ட

தேவாரம்

கருநட்ட கண்டனை அண்டத் 
தலைவனைக் கற்பகத்தைச் 
செருநட்ட மும்மதி லெய்யவல் 
லானைச்செந் தீமுழங்கத் 
திருநட்ட மாடியைத் தில்லைக் 
கிறையைச்சிற் றம்பலத்துப் 
பெருநட்ட மாடியை வானவர் 
கோனென்று வாழ்த்துவனே.
கருநட்ட எனத்தொடங்கும் தேவாரம்