Senthamil.Org

கருத்தனைப்பொழில்

தேவாரம்

கருத்தனைப்பொழில் சூழுங்கண்டியூர் 
வீரட்டத்துறை கள்வனை 
அருத்தனைத்திறம் அடியர்பால்மிகக் 
கேட்டுகந்த வினாவுரை 
திருத்தமாந்திகழ் காழிஞானசம் 
பந்தன்செப்பிய செந்தமிழ் 
ஒருத்தராகிலும் பலர்களாகிலும் 
உரைசெய்வா ருயர்ந்தார்களே.
கருத்தனைப்பொழில் எனத்தொடங்கும் தேவாரம்