Senthamil.Org

கருத்தனாய்க்

தேவாரம்

கருத்தனாய்க் கண்சி வந்து 
கயிலைநன் மலையைக் கையால் 
எருத்தனாய் எடுத்த வாறே 
ஏந்திழை அஞ்ச ஈசன் 
திருத்தனாய் நின்ற தேவன் 
திருவிர லூன்ற வீழ்ந்தான் 
வருத்துவான் ஊன்றி னானேல் 
மறித்துநோக் கில்லை யன்றே.
கருத்தனாய்க் எனத்தொடங்கும் தேவாரம்