Senthamil.Org

கன்னியையங்

தேவாரம்

கன்னியையங் கொருசடையிற் கரந்தான் றன்னைக்
கடவுஜரில் வீரட்டங் கருதி னானைப்
பொன்னிசூழ் ஐயாற்றெம் புனிதன் றன்னைப்
புஜந்துருத்தி நெய்த்தானம் பொருந்தி னானைப்
பன்னியநான் மறைவிரிக்கும் பண்பன் றன்னைப்
பரிந்திமையோர் தொழுதேத்திப் பரனே யென்று
சென்னிமிசைக் கொண்டணிசே வடியி னானைச்
செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.
கன்னியையங் எனத்தொடங்கும் தேவாரம்