Senthamil.Org

கன்னிய

தேவாரம்

கன்னிய ராடல் கலந்துமிக்க 
கந்துக வாடை கலந்துதுங்கப் 
பொன்னியல் மாடம் நெருங்குசெல்வப் 
புகலி நிலாவிய புண்ணியனே 
இன்னிசை யாழ்மொழி யாளோர்பாகத் 
தெம்மிறையேயிது வென்கொல் சொல்லாய் 
மின்னியல் நுண்ணிடை யார்மிழலை 
விண்ணிழி கோயில் விரும்பியதே.
கன்னிய எனத்தொடங்கும் தேவாரம்