Senthamil.Org

கனத்தினார்

தேவாரம்

கனத்தினார் வலி யுடைய 
கடிமதில் அரணம் மூன்றுஞ் 
சினத்தினுட் சினமாய் நின்று 
தீயெழச் செற்றார் போலுந் 
தனத்தினைத் தவிர்ந்து நின்று 
தம்மடி பரவு வார்க்கு 
மனத்தினுள் மாசு தீர்ப்பார் 
மாமறைக் காட னாரே.
கனத்தினார் எனத்தொடங்கும் தேவாரம்