Senthamil.Org

கந்த

தேவாரம்

கந்த மாமலர்ச் சந்தொடு காரகி லுந்தழீஇ
வந்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
அந்த நீர்முதல் நீர்நடு வாமடி கேள்சொலீர்
பந்த நீர்கரு தாதுல கிற்பலி கொள்வதே.
கந்த மார்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்நல்
செந்தண் புஜம்பொழிற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடிச்
சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை
வெந்த நீறணி யும்பெரு மானடி மேவரே.
கந்த மார்பொழில் சூழ்ந்த காழியான்
இந்தி ரன்தொழு நீலப் பர்பதத்
தந்த மில்லியை யேத்து ஞானசம்
பந்தன் பாடல்கொண் டோ தி வாழ்மினே.
கந்த மார்பொழிற் காழி ஞானசம்
பந்தன் சேர்கரு வுஜரு ளானிலை
எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர்
சிந்தை யிற்றுய ராய தீர்வரே.
கந்த வார்குழல் கட்டிலள் காரிகை 
அந்தி மால்விடை யோடுமன் பாய்மிக 
வந்தி டாய்மரு கற்பெரு மானென்று 
சிந்தை செய்து திகைத்திடுங் காண்மினே.
கந்த எனத்தொடங்கும் தேவாரம்