Senthamil.Org

கதிர்கொள்

தேவாரம்

கதிர்கொள் பசியே ஒத்தேநான் 
 கண்டேன் உம்மைக் காணாதேன் 
எதிர்த்து நீந்த மாட்டேன்நான் 
 எம்மான் றம்மான் றம்மானே 
விதிர்த்து மேகம் மழைபொழிய 
 வெள்ளம் பரந்து நுரைசிதறி 
அதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத் 
 தையா றுடைய அடிகளோ.
கதிர்கொள் எனத்தொடங்கும் தேவாரம்