Senthamil.Org

கண்ணுத

தேவாரம்

கண்ணுத லானும்வெண் ணீற்றினா னுங்கழ லார்க்கவே 
பண்ணிசை பாடநின் றாடினா னும்பரஞ் சோதியும் 
புண்ணிய நான்மறை யோர்களேத் தும்புக லிந்நகர்ப் 
பெண்ணின்நல் லாளொடும் வீற்றிருந் தபெரு மானன்றே.
கண்ணுத எனத்தொடங்கும் தேவாரம்