Senthamil.Org

கண்டியிற்

தேவாரம்

கண்டியிற் பட்ட கழுத்துடை 
யீர்கரி காட்டிலிட்ட 
பண்டியிற் பட்ட பரிகலத் 
தீர்பதி வீழிகொண்டீர் 
உண்டியிற் பட்டினி நோயில் 
உறக்கத்தில் உம்மையைவர் 
கொண்டியிற் பட்டு மறக்கினும் 
என்னைக் குறிக்கொண்மினே.
கண்டியிற் எனத்தொடங்கும் தேவாரம்