Senthamil.Org

கண்டவா

தேவாரம்

கண்டவா திரிந்து நாளுங் 
கருத்தினால் நின்றன் பாதங் 
கொண்டிருந் தாடிப் பாடிக் 
கூடுவன் குறிப்பி னாலே 
வண்டுபண் பாடுஞ் சோலை 
மல்குசிற் றம்ப லத்தே 
எண்டிசை யோரு மேத்த 
இறைவநீ யாடு மாறே.
கண்டவா எனத்தொடங்கும் தேவாரம்