Senthamil.Org

ஓதி

தேவாரம்

ஓதி யாருமறி வாரிலை யோதி யுலகெலாஞ்
சோதி யாய்நிறைந் தான்சுடர்ச் சோதியுட் சோதியான்
வேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி காற்றுமாய்
ஆதி யாகி நின்றானும் ஐயாறுடை ஐயனே.
ஓதி யாரண மாய நுண்பொருள் அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி
நீதி யாலநீ ழல்உரைக்கின்ற நீர்மையதென்
சோதியே சுடரே சுரும் பமர் கொன்றை யாய்திரு நின்றி யூருறை
ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே.
ஓதி மண்டலத் தோர்முழு துய்யவெற் பேறு 
சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூநீர்த் 
தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவுஜர் 
ஆதி சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.
ஓதி யோத்தறி யாவமண் ஆதரை 
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே 
ஆதி யேதிரு ஆலவா யண்ணலே 
நீதி யாக நினைந்தருள் செய்திடே.
ஓதி வாயதும் மறைகளே உரைப்ப தும்பல மறைகளே
பாதி கொண்டதும் மாதையே பணிகின் றேன்மிகு மாதையே
காது சேர்கனங் குழையரே காத லார்கனங் குழையரே
வீதி வாய்மிகும் வேதியா மிழலை மேவிய வேதியா.
ஓதி னத்தெழுத் தஞ்சுண ராச்சமண் 
மூவேதி னைப்படுத் தானைவெங் கூற்றுதை 
பாத னைப்பழை யாறை வடதளி 
நாத னைத்தொழ நம்வினை நாசமே. 
மூ வேது என்பது - வெப்பம்.
ஓதி எனத்தொடங்கும் தேவாரம்