Senthamil.Org

ஒழித்திடுமே

தேவாரம்

ஒழித்திடுமே உள்குவார் உள்ளத் துள்ள 
உறுபிணியுஞ் செறுபகையும் ஒற்றைக் கண்ணால்
விழித்திடுமே காமனையும் பொடியா வீழ
வெள்ளப் புனற்கங்கை செஞ்சடைமேல்
இழித்திடுமே ஏழுலகுந் தானா கும்மே
இயங்குந் திரிபுரங்க ளோரம் பினால்
அழித்திடுமே ஆதிமா தவத்து ளானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
ஒழித்திடுமே எனத்தொடங்கும் தேவாரம்