Senthamil.Org

ஒளிர்தரு

தேவாரம்

ஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க 
மவையார ஆட லரவம் 
மிளிர்தரு கையிலங்க அனலேந்தி யாடும் 
விகிர்தன் விடங்கொள் மிடறன் 
துளிதரு சோலையாலை தொழில்மேவ வேதம் 
எழிலார வென்றி யருளும் 
நளிர்மதி சேருமாடம் மடவார்க ளாரும் 
நறையூரின் நம்ப னவனே.
ஒளிர்தரு எனத்தொடங்கும் தேவாரம்