Senthamil.Org

ஒருவனையு

தேவாரம்

ஒருவனையு மல்லா துணரா துள்ளம்
உணர்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என்மே லேவி
இல்லாத தரவறுத்தாய்க் கில்லேன் ஏலக்
கருவரை சூழ்கானல் இலங்கை வேந்தன்
கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற
பொருவரையாய் உன்னடிக்கே போது கின்றேன்
புஜம்புகலூர் மேவிய புண்ணி யனே.
ஒருவனையு எனத்தொடங்கும் தேவாரம்