Senthamil.Org

ஒருவ

தேவாரம்

ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர் 
மேனியர் மடமாதர் 
இருவ ராதரிப் பார்பல புஜதமும் 
பேய்களும் அடையாளம் 
அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித் 
தகந்தொறும் பலிக்கென்று 
வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே 
வரிவளை கவர்ந்தாரே.
ஒருவ ராயிரு மூவரு மாயவன்
குருவ தாய குழகன் உறைவிடம்
பருவ ரால்குதி கொள்ளும் பழனஞ்சூழ்
கருவ தாங்கடம் புஜர்க்கரக் கோயிலே.
ஒருவ னாகிநின் றானிவ் வுலகெலாம் 
இருவ ராகிநின் றார்கட் கறிகிலான் 
அருவ ராவரை ஆர்த்தவ னார்கழல் 
பரவு வாரவர் பாவம் பறையுமே.
ஒருவ எனத்தொடங்கும் தேவாரம்